தேசிய செய்திகள்

வீடியோகான் தலைமையகம் உள்பட 4 இடங்களில் சிபிஐ சோதனை + "||" + CBI raids Videocon headquarters in Mumbai in case related to ex-ICICI CEO Chanda Kochhar's husband

வீடியோகான் தலைமையகம் உள்பட 4 இடங்களில் சிபிஐ சோதனை

வீடியோகான் தலைமையகம் உள்பட 4 இடங்களில் சிபிஐ சோதனை
வீடியோகான் தலைமையகம் உள்பட 4 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
மும்பை,

ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயலதிகாரி சந்தா கோச்சாருடைய கடன் சலுகை புகாரின் பேரில் வீடியோகான் தலைமையகம், அலுவலகங்கள் உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2009-ஆம் ஆண்டு முதல் ஐசிஐசிஐ வங்கிக்கு தலைமை செயலதிகாரியாக பணியாற்றி வந்த சந்தா கோச்சார், தமது கணவரின் நுபவர் நிறுவனத்தில் முதலீடு செய்த வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் சலுகைகள் காட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து சந்தா கோச்சார் ஐசிஐசிஐ தலைமை செயலதிகாரி பொறுப்பிலிருந்து விலகினார்.

இது தொடர்பாக சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்தது. 

இந்நிலையில், இது தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே மும்பையில் வீடியோகான் தலைமையகம் மற்றும் சந்தா கோச்சாரின் கணவர் தொடர்பான 4 அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.