தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டர்; 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை + "||" + Security Force encounter in Srinagar; 2 terrorists shot and killed

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டர்; 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டர்; 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் கோன்மோ என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.  இதனை அடுத்து அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.