தேசிய செய்திகள்

மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு + "||" + IMD: An earthquake with a magnitude of 4.5 on the Richter Scale hit Churachandpur, Manipur at 5:15 am today

மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு

மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
மணிப்பூரில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
மணிப்பூரின் சுராசந்த்பூர் பகுதியில் இன்று காலை 5.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.  இதனால் அந்த பகுதியில் ஏற்பட்ட பொருட்சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மணிப்பூரின் சேனாபதி நகரில் நேற்று காலை 10.19 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி இருந்தது.  இந்த நிலையில் அதன் அருகே அமைந்த சுராசந்த்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.