3 நாள் சுற்றுலாவாக கோவாவுக்கு சென்ற சோனியா, ராகுல்


3 நாள் சுற்றுலாவாக கோவாவுக்கு சென்ற சோனியா, ராகுல்
x
தினத்தந்தி 28 Jan 2019 5:38 PM GMT (Updated: 28 Jan 2019 5:38 PM GMT)

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி நாடு முழுவதும் பரபரப்பாக சுற்றி வந்து கட்சிப்பணிகளை கவனித்து வருகிறார்.

பனாஜி, 

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி நாடு முழுவதும் பரபரப்பாக சுற்றி வந்து கட்சிப்பணிகளை கவனித்து வருகிறார். காங்கிரஸ் தலைவராகவும், எம்.பி.யாகவும் ஓய்வின்றி உழைத்து வரும் அவர் சிறிது ஓய்வுக்காக, தனது தாயும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியாவுடன் கோவா மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார்.

தனிப்பட்ட முறையில் 3 நாள் சுற்றுலாவாக கடந்த 26–ந்தேதி சென்ற அவர்கள், அங்குள்ள கடற்கரைகள் போன்ற சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். இது தனிப்பட்ட முறையிலான சுற்றுலா என்பதால், இந்த நிகழ்வில் அவர்கள் கட்சியினர் யாரையும் சந்திக்கவில்லை.

தெற்கு கோவாவின் பிதுல் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று மாலையில் அவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த ரச்னா பெர்னாண்டஸ் என்ற பல் டாக்டர் ஒருவர், ராகுலையும், சோனியாவையும் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தார். பின்னர் ராகுலுடன் செல்பி புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் ராகுல் காந்தியின் அடக்கத்தை நெகிழ்ச்சியுடன் பாராட்டி இருந்தார்.


Next Story