டெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்


டெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:05 AM GMT (Updated: 29 Jan 2019 4:05 AM GMT)

டெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம் அடைந்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது 88 வயதில் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார்.  கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில்
ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர்.

இது தவிர்த்து தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார்.  அரசியல்வாதி, பத்திரிகையாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்ட இவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  சமதா கட்சியை தோற்றுவித்த இவர் ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர்.  அதன்பின் நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பின்னர் தொழிற்துறை மந்திரியானார்.

இந்த நிலையில், வயது முதிர்வை அடுத்து நீண்ட காலம் உடல்நல குறைவால் பெர்னாண்டஸ் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

Next Story