நடிகர்கள் அமீர்கான், நசுருதீன் ஷா ஆகியோர் துரோகிகள்- ஆர் எஸ் எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார்


நடிகர்கள் அமீர்கான், நசுருதீன் ஷா ஆகியோர் துரோகிகள்- ஆர் எஸ் எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார்
x
தினத்தந்தி 29 Jan 2019 11:46 AM GMT (Updated: 29 Jan 2019 12:04 PM GMT)

நடிகர்கள் அமீர்கான், நசுருதீன் ஷா ஆகியோர் துரோகிகள் என ஆர் எஸ் எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறி உள்ளார்.

அலிகார்

காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து , நடிகர்கள் அமீர்கான், நசுருதீன் ஷா ராஜ்பூர் மன்னர் ஜெய்சாந்த்,  நவாப் நஜீப் ஆகியோரைப் போலவே, 'துரோகிகள்' என்று ஆர்.எஸ் எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த  ஆர்.எஸ் எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறியதாவது;-

கலாம் காட்டிய பாதையில் நடக்கிறவர்கள் தவிர  கசாப், யாகூப், இஷ்ரத் ஜஹான் போன்ற முஸ்லிம் இளைஞர்கள்  இந்தியாவுக்கு  தேவையில்லை. கசாப் பாதையில் நடக்கிறவர்கள் துரோகிகள் என கருதப்படுவர்.

"அவர்கள் நல்ல நடிகர்களாக இருக்கலாம் (நவஜோத் சிங் சித்து, நசுருதீன் ஷா மற்றும் அமீர்கான்)   ஆனால் அவர்கள் துரோகிகளாக இருப்பதால் மரியாதைக்குரியவர்கள் அல்ல. அவர்கள் மீர் ஜாபர் மற்றும் ஜெய்சந்த் போன்றவர்கள்.

அயோத்தி வழக்கு விசாரணை தாமதத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், வகுப்புவாத சக்திகள் மற்றும் சில நீதிபதிகள் பொறுப்பேற்க வேண்டும்.

அயோத்தி வழக்கு விசாரணை நீதி கிடைப்பதற்கு தாமதத்திற்கு முதல் காரணம் காங்கிரஸ், இரண்டாவது காரணம் இடதுசாரிகள், மூன்றாவது காரணம் வகுப்புவாத சக்திகள், 4 வது காரணம் நீதிபதிகள் ஆகும் என கூறினார்.

Next Story