இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு


இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு
x
தினத்தந்தி 30 Jan 2019 1:42 PM GMT (Updated: 30 Jan 2019 1:42 PM GMT)

ரூ.13.28 கோடி மோசடி புகாரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

ஒடிசா மாநிலத்தின் கோராபுட் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில்,  மூத்த நிதி மேலாளராக பணியாற்றி வரும் பாபென் மித்ரா மற்றும் சில ஊழியர்கள் இணைந்து கடந்த 2013 முதல் 2017–ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் போலி ரசீதுகள் மூலம் ரூ.13.28 கோடியை மோசடி செய்து, நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த மோசடி தொடர்பாக பாபென் மித்ரா உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ அதிகாரிகள் தற்போது 5 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டும் போலி பணி ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் மூலம் ரூ.5 கோடி வரை மோசடி செய்ததாக பாபென் மித்ரா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து இருந்தது.


Next Story