பிரிவினைவாத தலைவருடன் பாக். மந்திரி பேச்சு: இந்தியா கண்டனம்


பிரிவினைவாத  தலைவருடன் பாக். மந்திரி பேச்சு: இந்தியா கண்டனம்
x
தினத்தந்தி 31 Jan 2019 2:50 AM GMT (Updated: 31 Jan 2019 6:33 AM GMT)

பிரிவினைவாத தலைவருடன் பாகிஸ்தான் மந்திரி பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான  மிர்வாய் உமர் பரூக்குடன் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகம்மது குரேஷி தொலைபேசியில் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் தூதர் சோகைல் மெகம்மதுவை  நேரில் வரவழைத்து  கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்குடன்,  பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி ஷா முகம்மது குரேஷி தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாடினார். 

அவரது செயல், இந்தியாவின் ஒற்றுமை, நல்லிணக்கம், இறையாண்மை ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளது. இதற்காக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோகைல் மகமூத்துக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து இந்திய அரசு சார்பில் வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே  கடும்கண்டனத்தைத் தெரிவித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story