அகிலேஷ் யாதவை அடுத்து மாயாவதிக்கு எதிராக ரெய்டு, ரூ.1400 கோடி ஊழலில் அமலாக்கப்பிரிவு அதிரடி


அகிலேஷ் யாதவை அடுத்து மாயாவதிக்கு எதிராக ரெய்டு, ரூ.1400 கோடி ஊழலில் அமலாக்கப்பிரிவு அதிரடி
x
தினத்தந்தி 31 Jan 2019 11:27 AM GMT (Updated: 31 Jan 2019 11:27 AM GMT)

அகிலேஷ் யாதவை அடுத்து மாயாவதிக்கு எதிராக ரெய்டு தொடங்கியுள்ளது. ரூ.1400 கோடி ஊழலில் அமலாக்கப்பிரிவு அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது.


உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது 2012-2013-ல் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டது.  முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சராக இருந்த காயத்திரி பிரசாத் விசாரணை வளையத்திற்குள் வரவுள்ளனர். கோடிக்கணக்கில் மோசடி நடந்த இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை விஸ்தரிக்கிறது. இதுதொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி, சமாஜ்வாடி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஒருவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சிபிஐ இவ்வழக்கை விசாரிக்கிறது. விசாரணை அகிலேஷ் யாதவ் வரையில் நகரலாம் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையே 2019 தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்ததால்தான் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாயாவதிக்கு எதிரான  ரூ. 1400 கோடி ஊழலில் அமலாக்கப்பிரிவு அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையில் 2007- 2012 வரையில் பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது ஏராளமான நினைவு மண்டபங்கள், அவரது கட்சி சின்னமான யானை சிலைகள், மாயாவதியின் சிலைகள் மற்றும் பூங்காங்கள் அமைக்கப்பட்டன. இதில் ஊழல் நடந்திருப்பதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின்னர் தேர்தலில் மாயாவதி கட்சி தோல்வியடைந்து, அகிலேஷ் யாதவ் முதல்வராக பொறுப்பேற்றதும், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான விசாரணையை அகிலேஷ் தீவிரப்படுத்தினார். பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

இப்போது 1400 கோடி ஊழலில் அமலாக்கப்பிரிவு அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது.

Next Story