பட்ஜெட் 2019- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் சந்திப்பு


பட்ஜெட் 2019- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் சந்திப்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 10:29 AM IST (Updated: 1 Feb 2019 10:29 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நிதி அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில்  இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசுகிறார்.

நிதி மந்திரி பதவி வகித்த அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். இதன் காரணமாக நிதித்துறை பொறுப்பு, ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரியான பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் இன்று காலை ராஷ்டிரபதி பவன் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நிதி அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்தார். 


Next Story