இடைக்கால பட்ஜெட்: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டம்

இடைக்கால பட்ஜெட் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும என பியூஸ் கோயல் கூறினார். #InterimBudget2019 #Budget2019
புதுடெல்லி
பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.
இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து அவர் பேசினார்.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம். புதிய ஓய்வூதிய திட்டத்தில் 10 கோடி பேர் பயன்பெறுவர். இந்த ஓய்வூதியத் திட்டம் பிரதம மந்திரி ஸ்ரீம் யோகி மந்தன் என்று அழைக்கப்படுகிறது.
இதில் ஒரு மாதத்திற்கு 3000 ரூபாய் உறுதிப்படுத்தப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம்.
* பொருளாதார நலிந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிக்கப்படும்
* இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும்.
Related Tags :
Next Story






