சிபிஐ இயக்குநர் நியமன விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுடெல்லி,
சிபிஐக்கு ஏன் முழு நேர இயக்குநரை நியமிக்கவில்லை எனவும், நீண்ட காலத்திற்கு இடைக்கால இயக்குநரை நியமித்தால், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு கூறியது. மேலும், முழு நேர சிபிஐ இயக்குநரை மத்திய அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் கூறியது.
அப்போது, அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால், சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு இன்று கூடும் என்றார். மேலும், நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குநராக நியமிப்பதற்கு முன்பாக, உயர்மட்டக்குழுவிடம் மத்திய அரசு ஒப்புதல் பெற்றதாகவும் அட்டார்னி ஜெனரல் கூறினார். இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
Related Tags :
Next Story