காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை காப்பி அடித்த இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கோயலுக்கு நன்றி - ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை காப்பி அடித்த இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கோயலுக்கு நன்றி என்று முன்னாள் மத்திய மந்திரி - ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.
இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நாட்டில் ஏழைகளுக்கே முன்னுரிமை வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை காப்பி அடித்த இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கோயலுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
Thank you Interim FM for copying the Congress' declaration that the poor have the first right to the resources of the country.
— P. Chidambaram (@PChidambaram_IN) February 1, 2019
Related Tags :
Next Story