‘நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை’ - மத்திய பட்ஜெட் பற்றி திருநாவுக்கரசர் கருத்து


‘நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை’ - மத்திய பட்ஜெட் பற்றி திருநாவுக்கரசர் கருத்து
x
தினத்தந்தி 2 Feb 2019 2:45 AM IST (Updated: 2 Feb 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை என்று மத்திய பட்ஜெட் பற்றி திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவிக்கையில், ‘இடைக்கால பட்ஜெட்டில் நீண்ட கால திட்டங்களை அறிவிப்பது சரியல்ல என்றும், ஒன்றிரண்டு அறிவிப்புகளை தவிர நாடாளுமன்ற தேர்தலுக்காக வாசிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை என்றே இதை நான் கருதுகிறேன்’ என்றும் கூறினார்.

மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் பற்றியும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றியும் எந்தவித அக்கறையும் காட்டாத அரசாங்கம், திடீரென்று தேர்தலுக்கு முன்பு இப்படி பேசுவது வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை” என்றார்.

Next Story