தேசிய செய்திகள்

தீவிரவாதிகளின் செயல்களை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் சுட்டுக் கொலை + "||" + J&K woman shot dead by terrorists, act filmed, put on social media

தீவிரவாதிகளின் செயல்களை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் சுட்டுக் கொலை

தீவிரவாதிகளின் செயல்களை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் செயல்களை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீநகர்

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சோபியான் பகுதியைச் சேர்ந்த இஷ்ரத் முனீர் (வயது 25 ). இந்த பெண்  ஐஎஸ் அமைப்பின் தீவிரவாத அட்டூழியங்களை மொபைல் போன் மூலம் வீடியோ  எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.  

அந்த பெண்ணை தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்து  உள்ளனர். முன்னதாக ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண்  கதறும் வீடியோவை தீவிரவாதிகள்  வெளியிட்டனர்.

இஷ்ரத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, அருகிலுள்ள ஷோபியான் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜைனபோராவின் டிராகா பகுதியில் போலீசார் 
அவரது உடலை கண்டெடுத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது -இந்தியா திட்டவட்டம்
காஷ்மீர் விவகாரத்தில் உதவுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதற்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு தெரிவித்து உள்ளது.
2. காஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள்; கவர்னர் சத்யபால் மாலிக் பேச்சுக்கு எதிர்ப்பு
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்து விட்டு காஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள் என்று காஷ்மீர் கவர்னர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
3. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
4. ஜம்மு-காஷ்மீரில் 2019 ஜூன் வரை மொத்தம் 126 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் -பாதுகாப்பு அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரில் 2019 ஜூன் வரை மொத்தம் 126 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டு உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் அத்துமீறிய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.