பிரதமர் மோடி நாளை ஜம்மு காஷ்மீர் பயணம்: பிரிவினைவாத தலைவருக்கு வீட்டுக்காவல்
பிரதமர் மோடி நாளை ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பிரிவினைவாத தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,
பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் நடவடிக்கை எனக்கூறி பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்கை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள நைகீன் என்ற இடத்தில், உள்ள மிர்வாய்ஸ் பரூக் இல்லத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மிர்வாய்ஸ் பரூக் உமரும் தனது டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story