பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் முன்னாள் எம்.பி மருமகன் சுட்டுக்கொலை


பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின்  முன்னாள் எம்.பி மருமகன் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 2 Feb 2019 3:29 PM IST (Updated: 2 Feb 2019 3:29 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் முன்னாள் எம்.பி மருமகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் தொகுதியில் இருந்து லாலுபிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் சார்பில் 1996-2008 இடையே தொடர்ந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், முகமது சகாபுதீன் (வயது 49). இவர் கிரிமினலாக இருந்து அரசியலுக்கு வந்தவர். 10 வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்.

இந்நிலையில் அவரது மருமகன் முகமது யூசுப் நேற்று இரவு பிரியப்பூர் கிராமத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அவரது மார்பு பகுதியை குறிவைத்து சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்ககோரி முகமது யூசுப் ஆதரவாளர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் உயரதிகாரி பேச்சு வார்த்தை நடத்தினார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தில்  ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி மருமகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story