காதலிகளுடன் ஜாலியாக ஊர் சுற்ற பைக்குகளை திருடிய 2 வாலிபர்கள் கைது
காதலிகளுடன் மலை பகுதிக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்ற பைக்குகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் ரவி சிங் பதோரியா (வயது 27), சுக்வீந்தர் சிங் (வயது 23). இவர்கள் தங்களுடைய காதலிகளுடன் ஊர் சுற்றுவது வழக்கம். அதுவும் பல்வேறு ரகங்களிலான மோட்டார் பைக்குகளில். ஆனால் இவை இவர்களது சொந்த பைக்குகள் அல்ல. அனைத்தும் திருடப்பட்ட பைக்குகள்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் உத்தரகாண்ட் அல்லது இமாசல பிரதேசத்தில் உள்ள பனிப்பொழிவு பிரதேசங்களுக்கு செல்ல முடிவு செய்தனர். அங்கு தங்களது காதலிகளுக்கு விருந்து வைப்பது என திட்டமிட்டனர். ஆனால் அதற்கான வசதிகள் இல்லை. கடந்த சில மாதங்களாக திருடி வைத்திருந்த சில மோட்டார் சைக்கிள்களே இவர்களிடம் இருந்துள்ளன.
இதனால் மலை பகுதிக்கு செல்வதற்காக மிக உயர்ந்த ரக மோட்டார் சைக்கிள்களை திருடுவது என அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை கைப்பற்றி உள்ளனர். இவர்கள் பைக்குகளை திருடியபின் ஊர்சுற்றி விட்டு பின்னர் அவற்றை விற்று விடுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story