‘சிமி’ அமைப்புக்கு தடை நீட்டிப்பு


‘சிமி’ அமைப்புக்கு தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2019 2:00 AM IST (Updated: 3 Feb 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

‘சிமி’ அமைப்புக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 1977-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் மாணவர்கள் இஸ்லாமிய இயக்கம் (சிமி) தொடங்கப்பட்டது. இந்த சங்கம் பல்வேறு பயங்கரவாத செயல்கள் மற்றும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து அதை சட்டவிரோத சங்கமாக கருதி பலமுறை மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி இந்த சங்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது.

5 ஆண்டுகள் தடை முடிவடைந்த நிலையில் அந்த இயக்கத்துக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு 5 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story