சி.பி.ஐ. புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமனம்

சி.பி.ஐ. புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டார்.
புதுடெல்லி,
சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மாவும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானாவும் பணியாற்றி வந்தனர். இருவருக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்தது. ஒருவர் மீது ஒருவர் லஞ்சப்புகார் சுமத்தினர்.
இதையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து, அலோக் வர்மா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், அவரை சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் நியமிக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, அவரும் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் பிறப்பித்த உத்தரவுகளை எல்லாம் அதிரடியாக ரத்து செய்தார்.
இதையடுத்து, மத்திய அரசு அவரை கடந்த மாதம் 10-ந்தேதி, தீயணைப்புத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்தது. அந்த பணிக்கு செல்ல விரும்பாமல், அலோக் வர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால், சி.பி.ஐ. இயக்குனர் பதவி, கடந்த சில வாரங்களாக காலியாக உள்ளது. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
சி.பி.ஐ. புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அடங்கிய குழு, கடந்த மாதம் 24-ந்தேதி கூடியது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
முழுநேர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், 3 பேர் குழு நேற்றுமுன்தினம் மீண்டும் கூடியது. அதில், சி.பி.ஐ. இயக்குனர் பதவிக்கு தகுதியானவர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
இந்த பட்டியலில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரி ரிஷி குமார் சுக்லாவை சி.பி.ஐ. இயக்குனராக நியமிக்க மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்தது.
அவர், பதவி ஏற்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை வகிப்பார். சுக்லா, 1983-ம் ஆண்டு, மத்தியபிரதேச பிரிவில் ஐ.பி.எஸ். அதிகாரி ஆனவர். மத்தியபிரதேச மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர். அங்கு சமீபத்தில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வந்தது. ஒரு வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டதால், சுக்லா மீது முதல்-மந்திரி கமல்நாத் அதிருப்தி அடைந்தார்.
சுக்லாவை டி.ஜி.பி. பதவியில் இருந்து நீக்கி, மத்தியபிரதேச போலீஸ் வீட்டுவசதி கழக தலைவர் என்ற முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றினார். இதுபோல், சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்.சுடன் சுக்லா மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார்.

Related Tags :
Next Story