சீமாஞ்சல் எக்ஸ்பிரெஸ் ரெயில் தடம் புரண்டது; 6 பேர் பலி


சீமாஞ்சல் எக்ஸ்பிரெஸ் ரெயில் தடம் புரண்டது; 6 பேர் பலி
x
தினத்தந்தி 3 Feb 2019 7:30 AM IST (Updated: 3 Feb 2019 7:30 AM IST)
t-max-icont-min-icon

சீமாஞ்சல் எக்ஸ்பிரெஸ் ரெயில் தடம் புரண்ட சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

ஹாஜிபூர்,

பீகாரின் ஜோக்பனி நகரில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் நோக்கி  சீமாஞ்சல் எக்ஸ்பிரெஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது.  இன்று அதிகாலை மேஹ்னார் சாலை பகுதியை 3.52 மணிக்கு கடந்து சென்ற இந்த ரெயில் சஹடாய் பஜர்க் பகுதியருகே வந்தபொழுது அதிகாலை 3.58 மணியளவில் பலத்த சத்தத்துடன் தடம் புரண்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் ரெயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டன.  இதில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  

தடம் புரண்ட ரெயில் பெட்டிகளில் 3 படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் (எஸ் 8, எஸ் 9, எஸ் 10), ஒரு பொது பெட்டி மற்றும் ஒரு ஏ.சி. (பி 3) பெட்டி ஆகியவையும் அடங்கும்.

பீகாரில் இருந்து டெல்லி செல்லும் ரெயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வது வழக்கம்.  அவர்கள் முறையாக முன்பதிவு செய்வது இல்லை.  இதனால் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள், பலியானோர் அல்லது காணாமல் போனவர்கள் ஆகியோரை பற்றிய அடையாளங்களை காண்பது என்பது கடினம் நிறைந்த ஒன்றாக அதிகாரிகளுக்கு அமைந்துள்ளது.

பல பயணிகள் கவிழ்ந்து கிடக்கும் பெட்டிகளுக்குள் சிக்கி உள்ளனர் என சம்பவத்தினை கண்டவர்கள் கூறியுள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Next Story