போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீச்சு: ஆர்.எஸ்.எஸ். தொண்டர் உள்பட 2 பேர் கைது
போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசியது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, கடந்த மாதம் 3-ந் தேதி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்குள்ள போலீஸ் நிலையம் ஒன்றின் மீது 4 குண்டுகள் வீசப்பட்டன.
இது சம்பந்தமாக, அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இந்த குண்டுவீச்சில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பிரவீன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சங்பரிவாரைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story