நெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - நிதின் கட்காரி தகவல்
நெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் சாலை பாதுகாப்பு வார விழா நேற்று நடந்தது. விழாவில் மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, ஹர்சவர்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் 1½ லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழக்கின்றனர். மக்களின் உயிரை பாதுகாப்பது நமது கடமை. விபத்து நடைபெறும் இடங்களில் நெடுஞ்சாலைகளை சீரமைக்க 5 ஆண்டுகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விபத்து இல்லாத தரமான சாலைகளை உருவாக்குவதே அரசின் நோக்கம். விபத்துகளை தவிர்க்க ஓட்டுனர் உரிமம் பெறுபவர்கள் கண்டிப்பாக முறையான ஓட்டுனர் பயிற்சி பெற வேண்டும் என்றார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி கார் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பேரணி குஜராத் மாநிலம் சபர்மதியில் தொடங்கி வங்காளதேசம் வழியாக மியான்மரில் 24-ந் தேதி நிறைவடைகிறது.

Related Tags :
Next Story