ஆந்திராவில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் - ஜெகன்மோகன் ரெட்டி புகார்


ஆந்திராவில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் - ஜெகன்மோகன் ரெட்டி புகார்
x
தினத்தந்தி 4 Feb 2019 5:59 PM GMT (Updated: 4 Feb 2019 5:59 PM GMT)

ஆந்திராவில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோராவை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு புகார்களை தேர்தல் கமி‌ஷனரிடம் தெரிவித்தார்.

அதன்படி, ஆந்திராவில் வெளியிடப்பட்டு உள்ள வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறிய அவர், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக, சந்திரபாபு நாயுடு அரசு மாநிலத்தின் 175 சட்டசபை தொகுதிகளிலும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை சட்ட விரோத பணத்தை இறக்கி இருப்பதாகவும் புகார் கூறினார்.


Next Story