மேற்கு வங்காளத்தில் நடப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானது பா.ஜனதா மீது சிவசேனா விமர்சனம்


மேற்கு வங்காளத்தில் நடப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானது பா.ஜனதா மீது சிவசேனா விமர்சனம்
x
தினத்தந்தி 5 Feb 2019 5:37 PM IST (Updated: 5 Feb 2019 5:37 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் நடப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானது என பா.ஜனதாவை சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.

மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியிலிருக்கும் சிவசேனா, ஒவ்வொரு விவகாரத்திலும்  பா.ஜனதா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. மேற்கு வங்காள போலீஸ், சிபிஐ இடையிலான மோதல் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ள சிவசேனா, மேற்கு வங்காளத்தில் நடப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானது என கூறியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் நடப்பது அனைத்தும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியது. மத்திய அரசால் கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். விசாரிக்க செல்லும் போது சிபிஐ அதிகாரிகள் சம்மனுடன் சென்று இருக்க வேண்டும். சாரதா நிதிநிறுவன மோசடியில் யாரையும் தப்பவிடக்கூடாது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக சிபிஐ அமைப்பு இந்த விஷயத்தில் இவ்வளவு தீவிரம் காட்டவில்லை என்பதை பார்க்கவேண்டும். மேற்கு வங்காளத்தில் நடக்கும் விவகாரங்களை பிரதமர் மோடி, நாட்டின் பிரதமராக பார்க்கவேண்டுமே தவிர பா.ஜனதாவின் தலைவராக இருந்து பார்க்கக் கூடாது என விமர்சனம் செய்துள்ளது சிவசேனா. 

மம்தா பானர்ஜிக்கும், எங்களுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், உண்மையில் மத்திய அரசுக்கு அதற்கு ஈடான வகையில் மம்தா பதிலடி கொடுத்து வருகிறார் என சிவசேனா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story