யோகி ஆதித்யநாத் விவகாரம்: மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? மம்தா கேள்வி
யோகி ஆதித்யநாத் விவகாரத்தில் பதிலளித்துள்ள மம்தா, மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? என மம்தா பானர்ஜி கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் பேரணிக்கு சென்ற அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர்கள் இறங்க கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்கிறது.
தேர்தல் ஆணையத்திடமும் பா.ஜனதா புகார் அளித்துள்ளது. இப்போது இவ்விவகாரத்தில் பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி, மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? என கேள்வியை எழுப்பியுள்ளார். மராட்டியம் மற்றும் பீகார் சென்ற போது அரசு மாளிகையில் தங்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார். மராட்டியத்தில் பா.ஜனதா அரசும், பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜனதா கூட்டணி அரசும் நடக்கிறது. எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்ற பா.ஜனதா தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி பதிலடியை கொடுத்துள்ளார்.
Related Tags :
Next Story