தேசிய செய்திகள்

டுவிட்டரில் இணைந்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி + "||" + BSP supremo Mayawati joins Twitter for 'speedy interactions' .

டுவிட்டரில் இணைந்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

டுவிட்டரில் இணைந்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மக்களுடன் விரைவாக கலந்துரையாடும் நோக்கில் டுவிட்டரில் இணைந்துள்ளார்.
லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்.  @SushriMayawati  என்ற பெயரில் மாயாவதி இணைந்துள்ளதாக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

ஊடகங்களுடனும் வெகுஜனமக்களுடனும் உடனுக்குடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் உடனுக்குடன் தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காகவும் மாயாவதி சமூக வலைதளத்தைத் தேர்வு செய்துள்ளதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது.