மேற்கு வங்காளத்தில் 23 தொகுதியிலும், உ.பி.யில் 74 தொகுதியிலும் பா.ஜனதா வெற்றி பெறும் - அமித் ஷா


மேற்கு வங்காளத்தில் 23 தொகுதியிலும், உ.பி.யில் 74 தொகுதியிலும் பா.ஜனதா வெற்றி பெறும் - அமித் ஷா
x
தினத்தந்தி 6 Feb 2019 3:22 PM GMT (Updated: 6 Feb 2019 3:22 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 23 தொகுதியிலும், உ.பி.யில் 74 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என அமித்ஷா பேசியுள்ளார்.

அலிகார், 
 
 உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், வாக்குச்சாவடி பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா தலைவர் அமித் ஷா பேசுகையில், மேற்கு வங்காளத்தில் எத்தனையோ ஊழல்களில் மக்கள் பணம் சுரண்டப்படுகிறது. போலீஸ் அதிகாரியை பாதுகாக்க மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டது வேடிக்கையாக உள்ளது. பா.ஜனதாவினரை திரிணாமுல் காங்கிரசார் கொலை செய்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் வன்முறை மூலம் பதில் சொல்லப் போவதில்லை. வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘தாமரை’ பொத்தானை அழுத்துவதன் மூலம் பதில் அளிப்போம். மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறப்போகிறது. அதனால்தான், மம்தா இப்படியெல்லாம் செய்கிறார்.

உத்தரபிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடியும் கூட்டணி அமைத்திருக்கலாம். ராகுல் காந்தியையும் இழுக்கக்கூடும். ஆனால், இதையெல்லாம் மீறி, உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என கூறினார். 

Next Story