டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
x
தினத்தந்தி 7 Feb 2019 6:33 AM GMT (Updated: 7 Feb 2019 7:42 AM GMT)

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்கலாமா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையமே முடிவு எடுக்காலம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

புதுடெல்லி

திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற  கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

அதன்படி தேர்தல் ஆணைய  வழக்கறிஞர்  சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி,  அங்கீகரிக்கப்படாத  கட்சி என்பதால் அம்மா மக்கள் முன்னேற்ற  கழகத்திற்கு  நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என பதில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் குக்கா் சின்னம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்கலாமா? வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு  கூறி உள்ளது.  குக்கர் சின்னத்தை வழங்க உத்தரவிட முடியாது. இரட்டை இலை தொடர்பான வழக்கை 
உயா்நீதிமன்றத்தில்
 4 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. 4 வாரத்திற்குள் உயர்நீதிமனறத்தில் முடிவு  எடுக்கப்படவில்லை என்றால் குக்கர் சின்னம் பற்றி முடிவு எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

Next Story