மாநிலங்களவை 4-வது நாளாக முடங்கியது


மாநிலங்களவை 4-வது நாளாக முடங்கியது
x
தினத்தந்தி 7 Feb 2019 6:16 PM GMT (Updated: 7 Feb 2019 6:16 PM GMT)

நாடாளுமன்ற மாநிலங்களவை தொடர்ந்து 4-வது நாளாக முடங்கியது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியவுடன், பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு சுழற்சி முறை தொடர்பான மத்திய அரசின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். அதற்கு சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஜனாதிபதி உரைக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

அந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அடுத்தடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோதும், அமளி நீடித்ததால், நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து 4-வது நாளாக சபை முடங்கியது.

Next Story