தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: 6 போலீசார் உட்பட 10 பேரை காணவில்லை + "||" + 6 Policemen Among 10 Missing After Avalanche In Jammu And Kashmir's Kulgam

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: 6 போலீசார் உட்பட 10 பேரை காணவில்லை

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: 6 போலீசார் உட்பட 10 பேரை காணவில்லை
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கிய 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு கடந்த சில நாட்களாக நிலவுகிறது. இந்த சூழலில், குல்காம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜவஹர் சுரங்கத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் அங்கு இருந்த போலீஸ் நிலையும் சிக்கியது. பனிச்சரிவு  ஏற்படும் போது போலீஸ் நிலையில் 20 பேர் இருந்துள்ளனர். இதில்,10 பேர் நல்வாய்ப்பாக தப்பிய போது, ஏனைய 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.  

10 பேரில் 6 பேர் போலீஸ்காரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பனிச்சரிவில் சிக்கிய 10 பேரையும் மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கடுமையான பனிப்பொழிவு காரணமாக 2-வது நாளாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  தொடர் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள்; கவர்னர் சத்யபால் மாலிக் பேச்சுக்கு எதிர்ப்பு
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்து விட்டு காஷ்மீர் வளத்தை கொள்ளையடித்தவர்களை தாக்குங்கள் என்று காஷ்மீர் கவர்னர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
2. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
3. ஜம்மு-காஷ்மீரில் 2019 ஜூன் வரை மொத்தம் 126 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் -பாதுகாப்பு அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரில் 2019 ஜூன் வரை மொத்தம் 126 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டு உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
4. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் அத்துமீறிய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் 2 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர்.