தேசிய செய்திகள்

காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது: ராணுவம் + "||" + Pak using social media to mobilize Kashmiri youth toward militancy: Army

காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது: ராணுவம்

காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது: ராணுவம்
காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது என்று இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
உதாம்பூர்,

காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது என்று ராணுவத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். உதாம்பூரில் பேசிய லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங் கூறியதாவது:-  ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் ஆதரவை பெறுவதற்காகவும், அவர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்கவும் பாகிஸ்தான் ராணுவம் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது. காஷ்மீரில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கிறது. பயங்கரவாதம் ஒட்டு மொத்த உலகத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது.

இந்திய ராணுவத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஆண்டுகளில், காஷ்மீரில் அமைதி மற்றும் செழுமை வளர்ச்சியை நாம் காண்போம் என்ற நம்பிக்கை  உள்ளது. பயங்கரவாத முகாம்கள் மீது மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்ச்சை எழுந்ததால் பல்டி அடித்தது, அமெரிக்கா ‘‘காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு விவகாரம்’’ என கருத்து
டிரம்ப் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா பல்டி அடித்தது. ‘‘காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை’’ என கூறி உள்ளது.
2. ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? -இம்ரான்கான் புதிய தகவல்
ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? என்பது தொடர்பாக இம்ரான்கான் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
3. இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் - டொனால்டு டிரம்ப்
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
5. காஷ்மீரில் கார்கில் போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி
காஷ்மீரில் கார்கில் போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.