தேசிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: காங்கிரஸ்-பாஜக ‘குல்லிபாய்’ என்ற வீடியோவை வெளியிட்டு பிரசாரம் + "||" + BJP, Congress setting the tune right for 2019 Elections, dis each other with 'Gully Boy' rap

பாராளுமன்ற தேர்தல்: காங்கிரஸ்-பாஜக ‘குல்லிபாய்’ என்ற வீடியோவை வெளியிட்டு பிரசாரம்

பாராளுமன்ற தேர்தல்: காங்கிரஸ்-பாஜக ‘குல்லிபாய்’ என்ற வீடியோவை  வெளியிட்டு பிரசாரம்
பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ்-பாஜக இரண்டு கட்சிகளும் ‘குல்லிபாய்’ என்ற வீடியோவை வெளியிட்டு பிரசாரம் செய்து வருகின்றன.
புதுடெல்லி

பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி காங்கிரசும் - பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்காக இரு கட்சிகளும் குல்லிபாய் என்ற பிரசார வீடியோவை வெளியிட்டு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாஜக சமீபத்தில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை குறித்து  'குல்லி பாய்' என்ற பிரசார ராப் வீடியோவை ட்வீட் செய்து இருந்தது.  வீடியோவில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி சகாப்தத்தின் ஊழல் வழக்குகள் ராப் பாடல்களோடு இணைக்கப்பட்டுள்ளன.

வீடியோ பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக 'ஆஷாடி' கோஷங்களை எழுப்புகிறது. ராபர்ட் வதேராவின் ஊழல் வழக்குகளில் இருந்து நேரு - காந்தி குடும்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் இந்த வீடியோ வசனங்களில் காணப்படுகிறது.


இதையடுத்து, காங்கிரஸ் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க.வை விமர்சிப்பதற்காக 'குல்லி பாய்' என்ற பிரசார ராப் வீடியோவை வெளியிட்டு உள்ளது. வீடியோ 'அஷாதி' என்ற முழக்கத்தோடு தொடங்குகிறது, இது பி.ஜே.பி.யின் ஊழல் நிகழ்வுகளைக் சுட்டிக்காட்டுகிறது. NaMo கட்சி நாட்டைத் தொந்தரவு செய்து வருவதாக வீடியோவில் காட்டப்படுகிறது. ரபேல் ஊழல், வியாபம் ஊழல், வேலைவாய்பின்மை குறித்து அதில் வசனங்கள் இடம்பெற்று உள்ளன. சௌக்கியாடர் சோர் ஹாய் (காவலாளியே திருடுகிறார்)  என்று வீடியோவில் அடிக்கடி கூறப்படும் சொல்லாக உள்ளது..

இந்த இரு கட்சிகளும் தங்கள் மொழியில் தொண்டர்களிடம்  எதிர்கட்சியை வசைபாடுவது இது முதல் முறையல்ல. நரேந்திர மோடி ஆட்சி மற்றும் கட்சியின் சாதனைகளை முன்னிலைப்படுத்தி, இன்னொரு இசை வீடியோ வெளியிடபட்டு உள்ளது. இந்த வீடியோ # ModiOnceMore என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியிடப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ் இதேபோன்ற வீடியோவை 'அப்னா டைம் அயியே' (எங்கள் நேரம் வந்தாச்சு) என்ற பெயரில் பகிர்ந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா தொடர்ந்தது
ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
2. கி.வீரமணி காரில் கல்வீசி தாக்கிய இந்து முன்னணி, பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை; மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கலெக்டரிடம் மனு
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வந்த காரில் கல்வீசி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர், பா.ஜனதா கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மனு கொடுத்தனர்.
3. பாஜக தேர்தல் அறிக்கை; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்
பாஜக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
4. பாஜக தேர்தல் அறிக்கை, மக்கள் பிரச்சினைகளை அறிந்து சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது -பிரதமர் மோடி
பாஜக தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி கூறும்போது, மக்கள் பிரச்சினைகளை அறிந்து சிறப்பான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது என கூறினார். #BJPSankalpPatr2019
5. கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடம், காங்கிரஸ் 6-வது இடம்
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சி 6-வது இடத்திலும் உள்ளன.