நாடு திரும்பியது மகிழ்ச்சி; டுவிட்டரில் அருண் ஜெட்லி தகவல்


நாடு திரும்பியது மகிழ்ச்சி; டுவிட்டரில் அருண் ஜெட்லி தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2019 12:29 PM GMT (Updated: 9 Feb 2019 12:29 PM GMT)

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து மத்திய மந்திரி அருண் ஜெட்லி இன்று இந்தியாவுக்கு திரும்பினார்.

புதுடெல்லி,

மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் இவரிடம் இருந்த நிதித்துறை, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல்நிலை சரியானதும் மீண்டும் நிதித்துறை பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், கடந்த 13ந்தேதி இரவு மருத்துவ பரிசோதனைக்காக அருண் ஜெட்லி திடீரென அமெரிக்கா சென்றார். பரிசோதனைகள் முடிந்து அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

இதனால் பியூஸ் கோயலுக்கு மீண்டும் நிதி மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது.  இதனை அடுத்து கடந்த 1ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை அவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, சிகிச்சை பெற்று நியூயார்க் நகரில் நலம் பெற்று வந்த ஜெட்லியிடம் செய்தியாளர்கள் பட்ஜெட் பற்றி கேள்வி எழுப்பினர்.  இதற்கு பதிலளித்த அவர், மருத்துவர்கள் நாடு திரும்புவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.  இதனை சார்ந்தே நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் விவாதம் பற்றி இந்தியாவுக்கு சரியான நேரத்தில் திரும்பி பதிலளிக்க முடியும் என கூறினார்.

இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து அருண் ஜெட்லி இன்று நாடு திரும்பியுள்ளார்.  இதுபற்றி ஜெட்லி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்து உள்ளார்.

Next Story