தேசிய செய்திகள்

டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து + "||" + Delhi: Fire broke out at a factory

டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து

டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து
டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,

டெல்லியின் கீர்த்தி நகரில் அமைந்த மரப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றன.

தொடர்ந்து 2 மணிநேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.  இதனால் காயம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை.  இத்தீவிபத்து பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் தீ விபத்து; 84 பேர் மீட்பு
மும்பை டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 84 பேர் மீட்கப்பட்டனர்.
2. மும்பையில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து; 100 பேர் கதி என்ன?
மும்பையில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் சிக்கி உள்ளனர்.
3. நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து; 4 பேர் காயம்
நெல்லையில் மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் காயம் காயமடைந்து உள்ளனர்.
4. அருவங்காடு தொழிற்சாலையில் வெடி விபத்து, படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
அருவங்காடு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
5. நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து: 14 கடற்படை வீரர்கள் பலி
நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடற்படை வீரர்கள் பலியானார்கள்.