மத்திய பிரதேச அரசின் செயல்பாட்டில் தலையிட மாட்டோம்; காங்கிரஸ் அறிவிப்பு


மத்திய பிரதேச அரசின் செயல்பாட்டில் தலையிட மாட்டோம்; காங்கிரஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2019 1:53 AM GMT (Updated: 10 Feb 2019 1:53 AM GMT)

மத்திய பிரதேச அரசின் செயல்பாட்டில் தலையிட மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

முதல் மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலம், அகர் மால்வா மாவட்டத்தில் சட்ட விரோதமாக பசுக்களை கடத்திய புகாரில் 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

கண்ட்வா மாவட்டத்தில் பசுக்களை வதைசெய்து கொன்றதாக 3 பேர் மீது ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலையிடுமா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், சட்டம் தனது கடமையை செய்யும் என முதல் மந்திரி கமல்நாத் கூறி இருக்கிறார். அப்பாவிகள் யாரும் துன்புறுத்தப்பட மாட்டார்கள். தண்டிக்கப்படவும் மாட்டார்கள். அதே நேரம் குற்றவாளிகள் தப்பவும் முடியாது, கமல்நாத் அனுபவம் மிக்கவர், தகுதி வாய்ந்தவர். எனவே இந்த விவகாரத்தில் மத்திய பிரதேச அரசு நிர்வாகத்தில் காங்கிரஸ் கட்சி தேவையற்ற விதத்தில் தலையிடாது என பதில் அளித்தார்.

Next Story