தேசிய செய்திகள்

பெண் தோழி விவகாரத்தால் முற்றிய சண்டை 14 வயது சிறுவனை குத்திக்கொன்ற சிறார்கள் + "||" + Miffed over friendship with girl, teens stab 14-year-old to death in Delhi

பெண் தோழி விவகாரத்தால் முற்றிய சண்டை 14 வயது சிறுவனை குத்திக்கொன்ற சிறார்கள்

பெண் தோழி விவகாரத்தால் முற்றிய சண்டை 14 வயது சிறுவனை குத்திக்கொன்ற சிறார்கள்
புதுடெல்லியில் பெண் தோழி விவகாரத்தால் சண்டை முற்றியதில் 14 வயது சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளான்.
புதுடெல்லி,

மத்திய டெல்லியில் சிறுவன் ஒருவன், தன்னுடைய பெண் தோழியுடன் பேசிய 14 வயது சிறுவனை சக சிறுவர்களுடன் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு சிறுவனின் வீட்டிற்கு சென்ற 4 பேர், அவனிடம் தகவல் ஒன்றை கேட்கவேண்டும் என்று அழைத்துள்ளனர். அவர்கள் பேசிக்கொண்டு இருந்த போது வாக்குவாதம் நேரிட்டுள்ளது. வாக்குவாதல் மோதலில் முற்றியது. அப்போது 4 சிறுவர்கள் சேர்ந்து சிறுவனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அப்பகுதியிலிருந்து தப்பிவிட்டனர். சிறுவன் உயிருக்கு போராடும் நிலையில் உதவிக்கு கத்தியுள்ளான். அவனுடைய தயார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மூன்று பேரை கைது செய்துள்ளனர். மற்றொரு சிறுவனை தேடி வருகிறார்கள். 

4 சிறுவன்களில் ஒரு சிறுவனது பெண் தோழி, உயிரிழந்த சிறுவனுடன் நட்பாக பழகியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிறுவன் கொலைக்கு திட்டமிட்டுள்ளான் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.