கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + India vs New Zealand 3rd T20 Munro, de Grandhomme fire NZ to 212

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு
கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவுக்கு 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி பெற்றது. இதனால் இந்த 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது. இந்தியவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகப்பட்சமாக மன்ரோ 72 ரன்களை எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களை எடுத்தார். அகமத், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
2. பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த ஆவணங்களை சேகரிக்கும் இந்தியா
உலக அரங்கில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த இந்தியா ஆவணங்களை சேகரித்து வருகிறது.
3. இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல, துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம் - கவிஞர் வைரமுத்து அறிக்கை
இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல, துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம் என கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
4. இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு - மத்திய அரசு
இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு
உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் தென்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...