தேசிய செய்திகள்

ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பாஜக அரசு பூட்டுப்போட்டிருக்கிறது - திருப்பூரில் பிரதமர் மோடி பேச்சு + "||" + The BJP government has been locked up for corruption and misbehavior Narendra Modi

ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பாஜக அரசு பூட்டுப்போட்டிருக்கிறது - திருப்பூரில் பிரதமர் மோடி பேச்சு

ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பாஜக அரசு பூட்டுப்போட்டிருக்கிறது - திருப்பூரில் பிரதமர் மோடி பேச்சு
ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பாஜக அரசு பூட்டுப்போட்டிருக்கிறது என்று திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
சென்னை,

திருப்பூரில் பெருமாநல்லூரில்  நடைபெற்ற பாரதீய ஜனதா பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். அங்கு கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதிகளின் பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில்  பிரதமர் மோடி பேசியதாவது:

கயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம். திருப்பூர் மண்ணிற்கு தலை வணங்குகிறேன். ஏனென்றால் திருப்பூர் குமரன் உள்ளிட்டோரின் துணிச்சலுக்கான மண்.

தொழில் முனைவோர், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற மக்களை கொண்டிருக்கிறது திருப்பூர். திருப்பூர் சின்னமலையின் துணிச்சல் உத்வேகம் அளிக்கிறது.

மீண்டும் நமோ என்ற தாங்கி வரும் டி-ஷர்ட் திருப்பூரில் இருந்துதான் வருகிறது.

பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் அரசு ஈடுபட்டிருகிறது.

தொழிலாளர்கள் நலன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மாதம் ரூ.3000 பென்சனாக வழங்கப்படும்.

கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ். இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைது செய்யப்படும் ஒவ்வொருவரும் யாரோ ஒரு தலைவரோடு தொடர்புள்ளவர்கள்.

2 பாதுகாப்பு பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் ஒன்று தமிழகத்தில் அமையவிருக்கின்றன.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. பாதுகாப்புத்துறை முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்யவில்லை. துல்லியத்தாக்குதலையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி பேசினர்.

இடைத்தரகளை வைத்து காங்கிரஸ் ஆட்சி ஊழல் செய்து வந்தது. ராணுவத்தை இழிவுபடுத்துவதற்காக, சிறுமைப்படுத்துவதற்காக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் அரசு எந்த அக்கறையும் செலுத்தவில்லை.

சாகார் மாலா திட்டத்தின் மூலம் கடலோர பகுதிகளில் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் வீடு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1.3 கோடி மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மருத்துவக்காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். நடுத்தரவர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம். பாஜக அரசின் நலப்பணிகள் சிலரை சந்தோஷ குறைவாக மாற்றி இருக்கிறது.

அரசாங்கத்தின் செயல்பாடுகளை பார்த்து சிலர் வருத்தப்பட்டனர். தற்போது விரக்தியடைந்திருக்கின்றனர். மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியை போன்றுதான் இருக்க வேண்டும் என காமராஜர் விரும்பினார். ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பாஜக அரசு பூட்டுப்போட்டிருக்கிறது

இவ்வாறு அவர் பேசி வருகிறார்.