தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதல் - 11 பேர் காயம் + "||" + Jammu and Kashmir: Grenade bomb attack carried out by terrorists - 11 injured

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதல் - 11 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதல் - 11 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 11 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  பல்லாடியம் அருகே வந்த போது அங்கிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று கையெறி குண்டுகளை வீசி எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தினர்.

இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள், 4 போலீசார் மற்றும் பொதுமக்கள் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீசாரும், பாதுகாப்பு படையினரும் விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வெளியீடு
தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
2. இருநாடுகளும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவி செய்ய தயார் - அமெரிக்கா
இருநாடுகளும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவி செய்ய தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3. காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்
காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதிலளித்துள்ளது.
4. ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசி உரையாடல்
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக , ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியில் உரையாடினார்.
5. பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.