பேரம் பேசிய ஆடியோ விவகாரம்: எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்


பேரம் பேசிய ஆடியோ விவகாரம்: எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Feb 2019 11:00 PM GMT (Updated: 10 Feb 2019 9:26 PM GMT)

பேரம் பேசிய ஆடியோ விவகாரத்தில், எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு, 

ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. மகனிடம் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ உரையாடல் வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் பேரம் பேசியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா கூறினார்.

இந்த நிலையில் அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடல் என்னுடையது தான் என்று எடியூரப்பா நேற்று திடீரென ஒப்புக்கொண்டார். இதையடுத்து எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ஒசதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எடியூரப்பா சதி செய்து, இந்த அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார். இதில் எடியூரப்பாவுக்கு வெற்றி கிடைக்காது. ஆடியோ உரையாடலில் இருப்பது எனது குரல் இல்லை என்று எடியூரப்பா கூறினார். இப்போது அந்த பேரம் பேசிய உரையாடல் எனது குரல் தான் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story