தேசிய செய்திகள்

உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு + "||" + Uri: Security forces spot suspicious movement near army camp, open fire

உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு

உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு
உரி பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் தென்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாம் உள்ளது. சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள முகாம் சுற்றுச்சுவரை ஓட்டி அதிகாலை 3 மணியளவில் சந்தேக நபர்கள் நடமாடுவதை பாதுகாப்பு படையினர் கண்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள்  உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை எந்த உடலும் கைப்பற்றப்படவில்லை. இதற்கிடையே, நல்லா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரு நபர்களை ராணுவத்தினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 222 ரன்களில் ஆல் -அவுட்
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்துள்ளது.
2. இந்தியா-பிரான்ஸ் இடையே கடல்சார் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார் விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
3. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி: டாஸ் போடுவதில் தாமதம்
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
4. தடை விதிக்கப்பட்டும் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவி மில்லியன் கணக்கானோரை சென்றடைகிறது
இந்தியாவில் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவிக்கு தடையிருந்தாலும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோரை சென்றடைகிறது என்பது தெரியவந்துள்ளது.
5. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் வீரமரணம்
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.