தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும் -சுப்ரீம் கோர்ட் உத்தரவு


தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள்  தேர்வு செய்ய வேண்டும் -சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 11 Feb 2019 7:22 AM GMT (Updated: 11 Feb 2019 7:22 AM GMT)

தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி

அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால், அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. இன்னும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா ஏன் அமைக்கவில்லை எனவும் சுப்ரீம் கோர்ட்  பலமுறை தமிழகத்துக்கு கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து தமிழக தலைமைச்செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில்  அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டுமே தாமதமாகிக்கொண்டு இருக்கிறது. அந்த பணியும் விரைவில் முடிந்துவிடும். எனவே 8 வாரகாலம் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்  தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதற்கும் அடுத்த 4 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Next Story