எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரம் தவறை ஒப்புக்கொண்டார் -எடியூரப்பா


எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரம் தவறை ஒப்புக்கொண்டார் -எடியூரப்பா
x
தினத்தந்தி 11 Feb 2019 8:51 AM GMT (Updated: 11 Feb 2019 8:51 AM GMT)

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. மகனிடம் பேரம் பேசிய விவகாரத்தில் தவறை ஒப்புக்கொண்ட எடியூரப்பா அரசியலில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூர்

ஜனதா தள எம்.எல்.ஏ. நாகன கவுடாவின் மகன் சரண் கவுடாவிடம் பா.ஜ.க மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ ஒன்றை கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டார். ஆடியோவில் இருப்பது தனது குரலில்லை என்றும் இதனை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என்றும் எடியூரப்பா உறுதி அளித்தார்.

இந்நிலையில், அந்த ஆடியோவில் இடம் பெற்றிருப்பது தனது குரல் தான் எனவும் மொத்த உரையாடலில் தேவைக்கு ஏற்றாற்போல குமாரசாமி எடிட் செய்து வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் ஆடியோவில் இருப்பது தனது குரல்தான் என எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, வாக்குறுதி அளித்தபடி எடியூரப்பா அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story