தேசிய செய்திகள்

மோடிக்கு எதிரான குஜராத் கலவர வழக்கு ஜூலையில் விசாரணை; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு + "||" + SC to hear Zakia Jafri's plea against clean chit to Modi in Guj riots in July

மோடிக்கு எதிரான குஜராத் கலவர வழக்கு ஜூலையில் விசாரணை; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

மோடிக்கு எதிரான குஜராத் கலவர வழக்கு ஜூலையில் விசாரணை; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு ஜூலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு அகமதாபாத் நகரில் குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த கலவரத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.  இதில் முன்னாள் எம்.பி. எஹ்சான் ஜாப்ரி என்பவரும் ஒருவர்.  இதுபற்றிய வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்டு மூடப்பட்ட அறிக்கை ஒன்றை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 8ந்தேதி தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில் அப்பொழுது குஜராத் முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, மூத்த அரசு அதிகாரிகள் உள்பட 63 பேருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளும் வகையிலான சான்றுகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு எதிராக ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கினை கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 5ந்தேதி குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜகியா வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு வருகிற ஜூலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமன தடையை நீக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்துக்கு மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
2. பட்டாசுகளுடன் ஒப்பிடும்பொழுது வாகனங்களால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது; சுப்ரீம் கோர்ட்டு
பட்டாசுகளுடன் ஒப்பிடும்பொழுது வாகனங்களால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3. பசுமை பட்டாசுகள் தயாரிப்பு; அறிக்கை தாக்கல் செய்ய நீரி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பசுமை பட்டாசுகளை தயாரிப்பது பற்றி மார்ச் 12க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீரி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
4. நில உரிமை இன்றி காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடை - சுப்ரீம் கோர்ட்டு
நில உரிமை இன்றி காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடை. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
5. பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம்
பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார்.