தேசிய செய்திகள்

செல்பி மோகத்தால் மற்றொரு உயிரிழப்பு ரெயில் பெட்டி மீது ஏறிய சிறுவன் உயிரிழப்பு + "||" + MP teen electrocuted after climbing atop rail wagon for selfie

செல்பி மோகத்தால் மற்றொரு உயிரிழப்பு ரெயில் பெட்டி மீது ஏறிய சிறுவன் உயிரிழப்பு

செல்பி மோகத்தால் மற்றொரு உயிரிழப்பு ரெயில் பெட்டி மீது ஏறிய சிறுவன் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் செல்பி மோகத்தால் மற்றொரு உயிரிழப்பு நேரிட்டுள்ளது.
ஜாபுவா,

இளைஞர்கள் மத்தியில் செல்பி எடுத்துக்கொள்ளும் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள், விபரீதமான செயல்களில் ஈடுபடும்போது அது உயிருக்கே உலை வைக்கிறது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இதனால் உயிரிழப்பு அதிகரித்துதான் காணப்படுகிறது. எத்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் பலனளிப்பதாக தெரியவில்லை. இப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன் செல்பி மோகம் காரணமாக ரெயில் பெட்டியின் மீது ஏறியுள்ளான், அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தான் என ரெயில்வே பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜாபுவா மாவட்டம் பெருகார்க் ரெயில் நிலையத்தில் பங்கஜ் என்ற 16 வயது சிறுவன் ரெயில் பெட்டியின் மீது ஏறி செல்பி எடுக்க முயற்சி செய்தான் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அப்போது அங்கு இருந்த உயர் மின் அழுத்த வயரை கவனிக்காமல் கை வைத்துவிட்டான். இதனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘செல்பி’யால் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பித்த இளைஞர்!
‘செல்பி’யால் பல உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், அமெரிக்காவில் செல்பி மூலம் ஒருவர் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பித்திருக்கிறார்.
2. செல்பி எடுத்த இளைஞருக்கு புதிய செல்போன் - சிவகுமார் வாங்கி கொடுத்தார்
சிவகுமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார்.