டெல்லியில் ஜீன்ஸ், கிராமங்களில் சேலை அணிகிறார் பிரியங்கா; பா.ஜ.க. எம்.பி. பேச்சுக்கு கண்டனம்


டெல்லியில் ஜீன்ஸ், கிராமங்களில் சேலை அணிகிறார் பிரியங்கா; பா.ஜ.க. எம்.பி. பேச்சுக்கு கண்டனம்
x
தினத்தந்தி 11 Feb 2019 1:52 PM GMT (Updated: 11 Feb 2019 1:52 PM GMT)

பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்சும், கிராம பகுதிகளில் சேலையும் அணிகிறார் என்ற பாரதீய ஜனதா எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.  தொடர்ந்து உத்தர பிரதேச மேற்கு பகுதி பொது செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டார்.

அதன்பின் உத்தர பிரதேசத்திற்கு முதன்முறையாக பிரியங்கா காந்தி இன்று சென்றார்.  அவருடன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் சென்றார்.

இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹரீஷ் திவிவேதி தனது பஸ்தி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்ஸ் மற்றும் டாப் அணிகிறார்.  ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு அவர் வரும்பொழுது சேலை கட்டி கொண்டு, பொட்டு வைத்து கொள்கிறார் என கூறினார்.

எங்களது கட்சிக்கோ அல்லது எனக்கோ பிரியங்கா ஒரு விசயமே இல்லை.  ராகுல் காந்தி ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டார்.  பிரியங்காவும் தோல்வியை மிகவிரைவில் நிரூபித்திடுவார் என்றும் கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம். வீரப்ப மொய்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து விமர்சனம் செய்துள்ளனர்.

கடந்த மாதம், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறும்பொழுது, பிரியங்காவை சூர்ப்பனகை என்றும் அவரது சகோதரர் ராகுலை ராவணன் என்றும் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.

Next Story