தேசிய செய்திகள்

விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்டது ‘ஜனநாயகமற்ற செயல்’ -மாயாவதி + "||" + Akhilesh Yadav stopped at airport undemocratic step says Mayawati

விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்டது ‘ஜனநாயகமற்ற செயல்’ -மாயாவதி

விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்டது ‘ஜனநாயகமற்ற செயல்’ -மாயாவதி
விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்டது ‘ஜனநாயகமற்ற செயல்’ என மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவ அமைப்பின் தலைவர் பதவியேற்பு  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற தன்னை, லக்னோ விமான நிலையத்தில் உ.பி. அரசு தடுத்து நிறுத்தியது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். “அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழாவைக்கண்டு அரசு அச்சப்படுகிறது. எனவே, நான் அங்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது,” என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார் . விமான நிலைய இயக்குநர் ஏகே.சர்மாவிடம் விழாவிற்கு செல்ல வேண்டும் என்றேன். அவர் “எனக்கு அதுபோன்று எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்றார் எனவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது அம்மாநில சட்டசபையிலும் அமளியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்டது ‘ஜனநாயகமற்ற செயல்’ என மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். “பிஜேபி அரசாங்கத்தின் சர்வாதிகார உதாரணம்” என கூறியுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, கூட்டணியை பார்த்து பா.ஜனதா அரசு பயம் கொண்டுள்ளது எனவே ஜனநாயகமற்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அனைத்து நிலைகளிலும் ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கண்டனம் தெரிவித்துள்ளார்.