குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்படும் புலி நடமாட்டம்


குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்படும் புலி நடமாட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:15 AM GMT (Updated: 12 Feb 2019 10:15 AM GMT)

குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் எல்லையில் உள்ள குஜராத்தின் மாஹிசாகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வனப்பகுதியில் புலி நடமாட்டம் காணப்பட்டுள்ளது. அப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அம்மாநில வனத்துறை சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தது. இந்நிலையில் நேற்று  இரவு அப்பகுதியில் 8 வயதுடைய புலி ஒன்று கேமராவில் பதிவாகியுள்ளது. அண்டைய மாநிலங்களில் இருந்து இந்த புலி வந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் குஜராத்துடன் எல்லையை பகிர்ந்துள்ளது. 

இறுதியாக கடந்த 1989-ம் ஆண்டு இங்கு வனத்துறை புலி கணக்கெடுப்பு பணியை நடத்திய போது புலி காணப்பட்டது. இப்போது 30 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் புலி மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அம்மாநில வனத்துறை மந்திரி கண்பத் வசாவா கூறியுள்ளார். 

Next Story