இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு - மத்திய அரசு


இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு - மத்திய அரசு
x
தினத்தந்தி 12 Feb 2019 11:30 AM GMT (Updated: 12 Feb 2019 11:30 AM GMT)

இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பல்வேறு விசாரணை முகமைகளால் பதிவு செய்யப்பட்ட சைபர் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2014-ல் இருந்து 2016 வரையில் கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் ஜி அகிர் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) அறிக்கையின்படி, 2016-ல் சைபர் மோசடி தொடர்பாக 2,522  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2015-ம் ஆண்டு 2,384 ஆகவும், 2014-ம் ஆண்டு 1,286 ஆகவும் இருந்துள்ளது. 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் தொடர்பான தகவல் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களில் மொத்தம்  6,192 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இ-மெயில், எஸ்.எம்.எஸ். வாயிலான மோசடிகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளிக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

Next Story